1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (09:02 IST)

தீபாவளி கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து!

crackers
நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.



நேற்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் புத்தாடைகள் அணிந்து பட்டாசுகள் வெடித்து தீபாவளியை கொண்டாடினர். எனினும் சில பகுதிகளில் அசம்பாவிதமாக தீபாவளி பட்டாசுகளால் தீ விபத்துகளும் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று தமிழ்நாடு முழுவதும் 364 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்து 254 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டதாக அழைப்புகள் வந்துள்ளது. 110 இடங்களில் பிற வகை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் நேற்று ஒரு நாளில் 102 இடங்களில் பட்டாசு வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 9 இடங்களில் பிறவகை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட 47 பேர் உள் நோயாளிகளாகவும், புறநோயாளிகளாக 622 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Edit by Prasanth.K