புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (09:48 IST)

மதுபானம் தர மறுத்த கடைக்கு தீ வைத்த மதுப்பிரியர்! – ஆந்திராவில் அதிர்ச்சி!

liquor
மதுபானம் தர மறுத்த கடையை மதுப்பிரியர் ஒருவர் தீ வைத்து கொளுத்திய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஆந்திர மாநிலம் மதுர்வாடா பகுதியில் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. நேற்று முன் தினம் ஒருவர் அக்கடைக்கு சென்று மதுபானம் கேட்டுள்ளார். ஆனால் அது கடை மூடப்படும் நேரம் என்பதால் கடை ஊழியர்கள் மதுபானம் தர மறுத்துள்ளனர். இதனால் அந்த நபருக்கும், கடை ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கையில் பெட்ரோல், தீப்பெட்டி சகிதம் வந்த அந்த குடிகார ஆசாமி எதிர்பாராத வேளையில் கடையிலும், கடை ஊழியர்கள் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். கடை ஊழியர்கள் பதறியடித்து தப்பி சென்ற நிலையில் கடை முழுவதுமாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இதுத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசாமியை கைது செய்துள்ளனர்.

Edit by Prasanth.K