1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. jail prisioner swallow mobile phone

சிறை அதிகாரிகள் திடீர் சோதனை.. மொபைலை விழுங்கிய கைதி கவலைக்கிடம்..!

jail
பீகார் மாநிலத்தில் சிறை அதிகாரிகள் திடீரென சோதனை செய்தபோது மொபைல் போன் வைத்திருந்த கைதி ஒருவர் அந்த போனை முழுங்கி விட்டதால் தற்போது மருத்துவமனையில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
பீகார் மாநிலத்தில் உள்ள கோபல்கஞ்ச் என்ற சிறையில் கைதிகள் மத்தியில் மொபைல் போன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்தது. இந்த புகாரை அடுத்து சிறை உயர் அதிகாரிகள் திடீரென சோதனை செய்தனர். 
 
அப்போது கைசர் அலி என்ற கைதி மொபைல் போன் வைத்திருந்த நிலையில் அவர் திடீரென மொபைலை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அந்த கைதியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தபோது அவரது வயிற்றில் மொபைல் போன் இருந்தது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கள்ளக்காதலனுடன் உல்லாசம்; கணவன், மாமியாரை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்த மனைவி!