திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (19:45 IST)

பிபிசி அலுவலகங்களில் சோதனை ஏன்? வருமான வரித்துறை விளக்கம்!

bbc delhi
பிபிசி டெல்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற வருமானவரி சோதனை இன்று காலை முடிவுக்கு வந்த நிலையில் இந்த சோதனை ஏன் என்பது குறித்து வருமானவரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். 
 
டெல்லி மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை குறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிபிசி குழும நிறுவனங்கள் கணக்கில் காட்டிய வருவாயும் இந்தியாவில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிபிசி ஊழியர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் உரிய நேரத்தில் விவாதிக்கப்படும் என்றும் சில பணப்பரிமாற்றங்களுக்கு வரி செலுத்தப்படவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva