1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (22:22 IST)

மாயனூர் காவிரி ஆற்றில் மாணவிகள் உயிரிழந்த விவகாரம், அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை ஏன் ? பாஜக கேள்வி ?

பா.ஜ.க கவுன்சிலர் மீது போலீசார் தாக்குதல் நடத்திய சம்பவம்  நடவடிக்கை கோரி எஸ்.பி.,யிடம் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் புகார்.
 
கரூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், சுமார் 100 க்கும் மேற்பட்ட பாஜக வினர் மனு அளித்தனர்
 
 
கரூர் மாவட்டம். புகழூர் நகர பாரதிய ஜனதா கட்சி தலைவரும், புகழூர் நகர்மன்ற உறுப்பினருமான திரு.கோபிநாத் அவர்களை அராஜகமான முறையில் தாக்கியும், அவதூறாக பேசியும், தொடர்ந்து கட்சிப்பணி ஆற்ற முடியாத அளவிற்கு, அவர்களை முடக்கும் விதமாக பொய் வழக்குகளை போட்டு வருவதோடு, நிர்வாகிகளை தாக்க முயலும்,  வேலாயுதம்பாளையம் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர் மீது மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரி, கரூர் மாவட்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம்  கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன்  தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கரூர் மாவட்ட அளவில் மதுக்கள் 24 மணி நேரமும் விற்பனை செய்யப்படுகின்றன. கஞ்சா விற்பனையும் அதிகரிப்பதால் கொலை, கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கின்றன. ஆகவே, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காகவும், பொதுமக்களின் நலனுக்காக பாஜக போராடி வரும் நிலையில், பாஜக நிர்வாகிகள் மீது போலீஸார் பொய் வழக்கு போடுகின்றது. மாயனூர் காவிரி ஆற்றில் மாணவிகள் உயிரிழந்த விவகாரத்தில் குளித்தலை டி எஸ் பி,  பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்காமல், அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்வதற்கு என்ன காரணம் அதுவும், டி.எஸ்.பி கையெழுத்து போட்டு பிரேத பரிசோதனை செய்தது ஏன் என்றும் வினா எழுப்பியதோடு, கரூர் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் இன்று வரை பணி நியமிக்கப்படாதது ஏன் என்றும் வினா எழுப்பினார்.