1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (07:57 IST)

60 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு.. பிபிசி அலுவலகத்தில் ஆவணங்கள் சிக்கியதா?

bbc delhi
பிபிசி அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து பிபிசி அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருமானவரித்துறையினர் எங்கள் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் நடத்திய சோதனை முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எங்கள் அலுவலக அதிகாரிகள் முழு அளவில் ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.
 
மேலும் எங்கள் ஊழியர்களின் நலன் மிகவும் முக்கியம். ஒரே இடத்தில் மூன்று நாட்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். இருப்பினும் தொடர்ந்து நாங்கள் மக்களுக்கு சேவை செய்வோம். தொடர்ந்து வருமானவரித்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ என தெரிவித்துள்ளது.
 
 இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன என்பதை குறித்து அறிவிப்பை இன்று வருமானவரித்துறை அலுவலகம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva