கட்சியில சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகல..! அரசியலுக்கு பை சொன்ன அம்பத்தி ராயுடு! – என்ன காரணம்?
பிரபல கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு அரசியலில் புகுந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் அரசியலை விட்டே விலகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபலமான முன்னாள் வீரர்களில் ஒருவர் அம்பத்தி ராயுடு. இந்திய அணிக்காக பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ராயுடு கடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்ற நிலையில் அதை ஃபேர்வெல் மேட்ச்சாக கொண்டு ஐபிஎல்லில் இருந்து ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு.
அதன்பின்னர் கடந்த வாரம் அரசியலில் இணைவதாக அறிவித்த அம்பத்தி ராயுடு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்து ஒரு வார காலம் கூட முழுதாக ஆகாத நிலையில் திடீரென தான் கட்சியை விட்டும், அரசியலை விட்டும் விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறுகிய கால முடிவு எனவும், மீதியை காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K