வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (17:37 IST)

முதல்வரின் சகோதரி காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல்

YSR sharmila
முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். .ராஜசேகர ரெட்டியின் மகளும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான  ஒய்.எஸ்.ஆர். சர்மிளா காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஷர்மிளா தெலங்கானா அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
 
2023ம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து, பிரச்சாரம் மேற்கொண்டார். 
 
இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, தெலங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்.
 
பாஜகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்த ஒய்.எஸ். சர்மிளா, காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஜனவரி 4 ஆம் தேதி சர்மிளா காங்கிரஸில் இணையவுள்ளதாகவும், அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.