ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 23 டிசம்பர் 2023 (20:13 IST)

தெலுங்கு தேசம் கட்சியுடன் கை கோத்தார் பிரசாந்த் கிஷோர்

prashanth kishore
ஆந்திராவில் நடைபெற உள்ள   பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோரின் IPAC  நிறுவனம் தேர்தல் வேலைகள் செய்ய  உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

ஆந்திரம் மாநிலத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குஅடுத்தாண்டு வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியான காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட பல கட்சிகள் ஜெயிக்க வேண்டி தங்கள்  கட்சித் தொண்டர்களை தயார் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற உள்ள   பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக  பிரசாந்த் கிஷோரின் IPAC  நிறுவனம் தேர்தல் வேலைகள் செய்ய  உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக IPAC  நிறுவனம் வேலை பார்த்தது குறிப்பிடத்தக்கது.