1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 6 ஜனவரி 2024 (11:47 IST)

நாடாளுமன்றத்தில் போர் முழக்கம்! அதிர வைத்த பெண்! 170 ஆண்டுகளில் முதல் இளம் பழங்குடி இன எம்.பி!

New Zealand War Cry
நியூசிலாந்தில் இளம் பழங்குடி இன பெண் முதல் முறையாக நாடாளுமன்ற எம்.பியாக பதவியேற்ற நிலையில் மன்ற கூட்டத்தில் வெற்றி முழக்கம் இட்ட வீடியோ வைரலாகியுள்ளது.



நியூசிலாந்து என்பது ஒரே நாடாக கருதப்பட்டாலும் உண்மையில் அதும் சுமார் 700 தீவுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த 700 தீவுகளையும் நிர்வகிக்கும் நியூசிலாந்தின் நாடாளுமன்ற குழு மற்ற நாட்டு நாடாளுமன்ற முறைகளை சற்று வித்தியாசமானது.
123 உறுப்பினர்களை கொண்ட இந்த நாடாளுமன்றத்தில் 170 ஆண்டுகளில் முதல்முறையாக மவோரி பழங்குடி இனத்தை சேர்ந்த 21 வயதான ஹனா ரவிடி மைப்பி க்ளார்க் என்னும் இளம்பெண் எம்.பியாக தேர்வு செய்யபட்டுள்ளார்.



இந்நிலையில் நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தங்கள் இன அடையாளமான ஹக்கா எனப்படும் போர் அறைக்கூவல் பாடலை பாடி வெற்றி முழக்கம் செய்து பதவி ஏற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Edit by Prasanth.K