செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 டிசம்பர் 2023 (19:33 IST)

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸில் இணைந்த சென்னை கிங்ஸ் வீரர்

AMBATH RAYUDU-JEGANMOHAN REDDY
சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசக் கிரிக்கெட்டில் அவருக்கு சிறப்பான கேரியர் அமையவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் ஆறு முறை ஐபிஎல் வென்ற அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார்.
 
இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஐபிஎல் கோப்பையோடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவர் சந்தித்தார். அதிலிருந்து இந்த பேச்சுகள் எழுந்துள்ளன.
 
ஜகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய உள்ளதாகவும், ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் எனத் தகவல் வெளியானது.
 
இந்த  நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை இன்று  நேரில் சந்தித்த அம்பதி ராயுடு அவர் முன்னிலையில்  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்து கொண்டார்.
 
அடுத்தாண்டு தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டு, தேர்தலிலும் அவர்  போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.