வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (18:59 IST)

இஸ்ரோவின் அடுத்த ப்ளான் ஆதித்யா எல்1- இது எங்கே போகிறது தெரியுமா?

இஸ்ரோவின் கனவு திட்டங்களான மங்கல்யான், சந்திரயான் திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இஸ்ரோ தனது புதிய திட்டமான “ஆதித்யா எல் 1” பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ மங்கல்யான் செயற்கைகோளை வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியதன் மூலம் உலக விஞ்ஞானிகளை திரும்பி பார்க்க வைத்தது. செவ்வாய் கிரகத்திலிருந்து செயற்கைகோளில் கிடைத்த படங்களை கொண்டு ஆய்வுகள் செய்து வருகின்றனர்.

தற்போது சந்திரயான் 2 திட்டம் மூலம் நிலவிலும் கால் பதித்துள்ளனர். முன்னதாக அனுப்பப்பட்ட சந்திரயான் 1 நிலவில் சுற்றுவட்ட பாதையில் பறந்தபடியே ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆனால் சந்திரயான் 2 நிலவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது.

இதைத்தொடர்ந்து 2019-20 ம் ஆண்டிற்குள் சூரியனை ஆய்வு செய்ய “ஆதித்யா எல்1” என்ற செயற்கைக்கோளை சூரியனுக்கே அனுப்ப உள்ளது இஸ்ரோ. இந்த செயற்கைக்கோளானது மங்கல்யான், சந்திரயான் போல கோளை சுற்றி வராமல் நிலையாக ஓரிடத்தில் நின்றபடி ஆய்வுகளை மேற்கொள்ளும். சூரியனின் மேலடுக்கு மிகை வெப்ப பகுதியான கரோனா குறித்தும் அதன் மேற்பரப்பில் காணப்படும் துகள்கள் குறித்தும் ஆதித்யா ஆய்வு செய்ய உள்ளது என இஸ்ரோ கூறியுள்ளது.