வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 21 ஜூலை 2019 (12:41 IST)

நாளை விண்ணில் பாய்கிறது சந்திராயன் 2.. இஸ்ரோ உறுதி

சந்திராயன் 2 விண்கலம் நாளை விண்ணில் பாய்வது உறுதி என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் நாளை சந்திராயன் 2 வின்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ உறுதி அளித்துள்ளது.

இது குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த இஸ்ரோவின் தலைவர் கைலாசவடிவு சிவன், நாளை பிற்பகல் 2.43 மணிக்கு உறுதியாக சந்திராயன் 2 விண்கலம், ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட்டின் மூலம் ஏவப்படும் எனவும், இனி எந்த தொழில்நுட்ப கோளாறும் ஏற்பட வாய்ப்பில்லை எனவும் கூறினார். மேலும் சந்திராயன் விண்ணில் ஏவப்படுவதற்கான கவுண்டவுன் இன்று மாலை 6.40 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.