புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (17:21 IST)

சந்திரயான் அனுப்பிய சந்திரகாந்தா – விவசாய குடும்பத்தில் விஞ்ஞானி

இன்று சந்திரயான் 2 விண்னில் ஏவப்பட்டதை உலகமே உற்று நோக்கும் இந்த நேரத்தில் அதை சாத்தியப்படுத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான சந்திரகாந்தா பிரபலமாகி இருக்கிறார்.

மேற்கு வங்கத்தில் உள்ள ஹூக்ளி பகுதியில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர் சந்திரகாந்தா. அவரது அப்பா மதுசூதன் குமார் அவருக்கு சூரியகாந்தா (சூரிய புத்திரன்) என்றே பெயர் வைத்திருந்தார். ஆனால் அவரது பள்ளி ஆசிரியர் சந்திரகாந்தா (சந்திர புத்திரன்) என பெயர் வைக்கும்படி மதுசூதனிடம் கூறியுள்ளார்.

தற்செயலோ அல்லது அற்புதமோ தற்போது நிலவுக்கு சந்திரயானை ஏவி உண்மையான சந்திரபுத்திரனாக மாறி இருக்கிறார் சந்திரகாந்தா. இதுகுறித்து மதுசூதன் பெருமிதமாக “நான் எப்போதும் வயல்களில் வேலை செய்பவன். என் மகனுக்கு அவர் ஆசிரியர்தான் எல்லாமே சொல்லி கொடுத்தார். சந்திரயான் 2 ஏவப்படுவது முதலில் நிறுத்தப்பட்டவுடன் நாங்கள் மிகவும் வருத்தம் அடைந்தோம். இன்று இவ்வளவு பெரிய சாதனையில் எங்களது மகனின் பங்கும் இருப்பதை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளது” என்று தெரிவித்தார்.

2001ல் இஸ்ரோவில் சேர்ந்த சந்திரகாந்தா ப்ராஜெக்ட் மேனேஜராக தன் பணியை தொடங்கினார். சந்திரயான் 1, ஜிசாட் 12 மற்று ஆஸ்ட்ரோசாட் போன்ற செயற்கைகோள்களுக்கு ஆண்டனாக்களை வடிவமைத்தது இவர்தான். தற்போது துணை திட்ட இயக்குனாராக இருக்கும் இவர் சந்திரயான் 2-க்கான ரேடியோ அலைவரிசை அமைப்பு, மின்காந்த அலைவரிசை அமைப்பு ஆகியவற்றை தயாரித்துள்ளார்.