புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (18:30 IST)

பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் 2 – இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்

இன்று சந்திரயான் 2 விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதையடுத்து பூமியின் சுற்றுவட்ட பாதையில் சந்திரயான் பயணிக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது இஸ்ரோ.

இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான சந்திரயான் 2 விண்கலம் மூலமாக இன்று விண்ணில் செலுத்தப்பட்டது. பூம்பியின் சுற்று வட்டப்பாதையில் சுற்றியவாறே மெல்ல மெல்ல பாதையை விரிவுப்படுத்தி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 2 நுழையும். நிலவின் சுற்றுவட்ட பாதைக்கு செல்ல 47 நாட்கள் சந்திரயான் 2 பயணிக்க வேண்டியுள்ளது.

சந்திரயான் 2 இதுவரை எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தெற்கு பகுதியில் ஆய்வை மேற்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் முதல்கட்டமாக வெற்றிகரமாக பூமியின் சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 2 நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கலனிலிருந்து சந்திரயான் பிரியும் புகைப்படத்தை சற்றுமுன் இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.