சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!
ஆசியாவிலேயே முதல்முறையாக சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி சென்னையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடியில் ஆசியாவிலேயே முதல்முறையாக சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி பிப்ரவரி 21ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி, ஐஐடிஎம் இந்தியா ஆகியவை இணைந்து நடத்தும் இந்த போட்டிக்கு மத்திய அரசின் ரயில்வே அமைச்சகம் ஒத்துழைப்பு தர இருக்கிறது. உலகம் முழுவதும் ஹைப்பர்லூப் டெக்னாலஜியை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும், இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் நோக்கமாகவும் இந்த போட்டி நடத்த போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி யின் தனித்துவமான ஹைப்பர்லூப் சோதனை உள் கட்டமைப்பில் நடைபெறும் என்றும், ரயில்வே துறை உள்பட ஒரு சில நிறுவனங்கள் ஒத்துழைப்புடன் அதிநவீன தொழில் கூடம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த டெக்னாலஜி மூலம் உருவாக்கப்படும் ரயில், மணிக்கு 1000 ம் கிலோமீட்டர் வரை செல்லும் என்றும், கடந்த 2013 ஆம் ஆண்டு டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களில் இது குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்கா, ஐரோப்பா, துருக்கி உள்பட பல பகுதியில் உள்ள நிறுவனங்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva