1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 ஜனவரி 2025 (16:07 IST)

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் என்ற பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில் இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்தில் அவர் கூறியிருப்பதாவது:


தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி வைத்தேன்.

அந்தப் பணி, இன்று சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு பள்ளியில் நிறைவு பெற்றிருப்பதை தம்பி அன்பில் மகேஷ் அவர்கள் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்தார்.

நவீனமயமான தொடக்கப் பள்ளிகள், நாட்டின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களில் நம் மாணவர்கள் இடம் பெற உதவும்  மாடல் பள்ளிகள் என பள்ளிக்கல்வித் துறை படைத்து வரும் சாதனைகளால் மகிழ்கிறேன்!

அரசுப் பள்ளிகள் நம் பெருமையின் அடையாளம் என உரக்கச் சொல்வோம்!

Edited by Mahendran