மதியம் 2.43-க்கு விண்ணில் - சந்திராயன் 2 ரெடி !

Last Updated: திங்கள், 22 ஜூலை 2019 (14:53 IST)
கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவ தயாராக இருந்த சந்திராயன் 2 தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் இன்று மதியம் 2.43க்கு சந்திராயன் 2 வின்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ உறுதி அளித்துள்ளது.

இதுவரை யாரும் ஆய்வு செய்திடாத நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய இருக்கும் இந்த விண்கலம் மூலம்’ நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும் மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம்.’ என இஸ்ரோ விஞ்சானிகல் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இந்த விண்கலம் கிட்டத்தட்ட ரூ.978 கோடி செலவில் உருவாகியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :