வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (14:54 IST)

சரித்திரம் படைத்த இந்தியா ...விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2 !

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சந்திரனில் மனிதனை இறக்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் நம் இந்தியாவும் சொந்தமாகவே விண்கலனை தயாரித்து சந்திரனுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. இந்த முயற்சியில் கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவ தயாராக இருந்த சந்திராயன் 2 தொழில்நுட்பக்காரணங்களால் நிறுத்தப்பட்ட நிலையில் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
நிலவினை ஆய்வு செய்வதற்காக சந்திராயன் 2 விண்கலம், கடந்த 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் நிறுத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கோளாறுகளை சரிசெய்த நிலையில் இன்று மதியம் 2.43க்கு சந்திராயன் 2 வின்கலம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ உறுதி அளித்துள்ளது.
 
இதுவரை யாரும் ஆய்வு செய்திடாத நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய இருக்கும் இந்த விண்கலம் மூலம்’ நிலவை மேலும் புரிந்துகொள்ளவும், இந்தியாவுக்கும் மனித சமுதாயத்துக்கும் பயனளிக்கும் வகையில் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவும் முயல்கிறோம்.’ என இஸ்ரோ விஞ்சானிகள் தெரிவித்துள்ளனர். முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இந்த விண்கலம் கிட்டத்தட்ட 978 கோடி  ரூபாய் செலவில் உருவாகியுள்ளது. 
இந்த சந்திராயன் வெற்றிகரமாக சந்திரனின் தரையிரங்க மக்கள் கோவில்களில் பிராத்தனை செய்த நிலையில் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்து சந்திரனை ஆராயச் சென்றது சந்திராயன் 2. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் ஓட்டு மொத்த இந்திய மக்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.