செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (15:24 IST)

1,111 ரூபாயில் விமானத்தில் பயணம் செய்யலாம்: இண்டிகோ சூப்பர் அறிவிப்பு..!

indigo
இந்த ஆண்டின் பண்டிகைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு ’Grand Runway Fest Sale’ என்ற சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரூ.1,111 ஆரம்ப விலை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை செப்டம்பர் 30 வரை மட்டுமே பயன்படுத்தி கொள்ளலாம்.

 பாங்க் ஆப் பரோடா மற்றும் பெடரல் வங்கி வாடிக்கையாளர்கள் விமானத்தில் பயணம் செய்தால் அவர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15 சதவீதம் வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். இந்த சலுகையை பெற குறைந்தபட்சம் ரூ. 5000 மதிப்புள்ள டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும்.

மேலும் கோவா, ஸ்ரீநகர், சிங்கப்பூர் மற்றும் அபுதாபி போன்ற சில தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர், வெளிநாட்டு  நகரங்களுக்கு இண்டிகோ 20 சதவீதம் கூடுதல் தள்ளுபடி வழங்குகிறது.

இண்டிகோவில் பயணம் செய்யும் பயணிகளுக்கான இந்த சிறப்புச் சலுகைகள் செப்டம்பர் 24, 2024 முதல் செப்டம்பர் 30, 2024 வரை செல்லுபடியாகும். ஜனவரி 1, 2025 முதல் மார்ச் 31, 2025 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்யலாம்.

Edited by Mahendran