தொடர்புடைய செய்திகள்
- ’கோட்’ படத்திற்கு பெண்களுக்கு இலவச டிக்கெட் வழங்கிய ரசிகர்கள்.. அன்னதானமும் உண்டு..!
- குரூப்2, குரூப் 2ஏ ஹால் டிக்கெட் வெளியீடு.. எந்த இணையதளத்தில் டவுன்லோடு செய்யலாம்?
- தீபாவளி ரிலீஸும் இல்லையா…? சூர்யாவின் கங்குவா எப்பதான் வரும்?
- கவின் நடித்த ‘பிளடி பெக்கர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா, சிவகார்த்திகேயனுடன் மோதல்?
- கோட் படத்தின் டிக்கெட் விலையை உயர்த்திய தியேட்டர்… ஸ்க்ரீன் ஷாட் போட்டு விமர்சிக்கும் ரசிகர்கள்!
தீபாவளிக்கு அரசு சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு.. ஒரு மணி நேரத்தில் டிக்கெட் காலி..!
தீபாவளி தினத்தில் சொந்த ஊர் செல்ல அரசு சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கிய நிலையில் ஒரு மணி நேரத்தில் அனைத்து பேருந்துகளுக்குமான டிக்கெட் காலி ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.
அரசு விரைவு பேருந்துகளில் 60 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை என்பதால் தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அக்டோபர் 28, 29 ஆகிய தேதிகளில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மணி நேரத்தில் நிரம்பி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1500 பேருந்துகளுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருவதாகவும் இது தவிர வழக்கம் போல் சிறப்பு பேருந்துகளும் அறிவிக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
அதேபோல் நவம்பர் மூன்றாம் தேதி தீபாவளி பண்டிகை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இதற்கான டிக்கெட் வரும் விரைவாக நிரம்பி வருகிறது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Edited by Siva
