வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (11:07 IST)

விமானம் கிளம்பியபோது திடீரென கதவை திறக்க முயன்ற பயணி: சென்னையில் பரபரப்பு..!

Flight
சென்னையில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட விமானத்தின் கதவை ஒரு பயணி திறக்க முயற்சித்தார். இதை கண்டு பதற்றமடைந்த விமானிகள் உடனடியாக விமானத்தை ஓடுதளத்தில் அவசரமாக நிறுத்தினர், இது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சென்னையில் இருந்து மும்பை விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில், மும்பையைச் சேர்ந்த வருண் பாரத் என்ற இளைஞர் விமானத்தின் அவசரகால கதவின் பொத்தானை அழுத்தினார். இந்த செயலை கண்டு விமானிகள் உடனடியாக விமானத்தை ஓடுதளத்திலேயே நிறுத்தினர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
 
தவறுதலாக அவசரகால கதவின் பொத்தானை அழுத்தியதாக விளக்கம் அளித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதற்குப் பிறகு, தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சோதனை செய்தனர், அதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேர தாமதத்துக்குப் பிறகு விமானம் மும்பைக்கு புறப்பட்டது.
 
 
Edited by Mahendran