வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (07:18 IST)

4.இலட்சம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி கோட் படம் பார்த்த விஜய் ரசிகர்கள்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த விஜய் படம் கேட் திரைப்படம் ரசிகர்கள் ஷோ திரையிடப்பட்டது.
 
ஒரு டிக்கெட் விலை 400 ரூபாய் வீதம் 1000 டிக்கெட்டுகள் 4. இலட்ச ரூபாய் கொடுத்து ரசிகர்கள் வாங்கி உள்ளார்கள்.
 
எந்தவிதமான ஆடம்பரமும் இல்லாமல் விஜயின் கட்சி கொடி இல்லாமல் அமைதியான முறையில் தியேட்டரில் இருந்தனர்.
 
9 மணி அளவில் படம் திரையிடப்பட்டது ரசிகர் ஆரவாரத்துடன் பூக்களை தூவி படத்தைக் கண்டு களித்தனர் குறிப்பாக தங்களது செல்போனில் அனைத்து ரசிகர்களும் தங்களை மட்டும் விஜய் படத்தை வீடியோவில் பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ரசிகர் மன்றத்தினர் முதலில் விஜயகாந்த் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தனர் முதல் காட்சியில் விஜயகாந்த் தோன்றும் காட்சியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து கைதட்டி வரவேற்றனர்.