1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 2 அக்டோபர் 2023 (09:32 IST)

உலகின் மிகச்சிறந்த விஸ்கியாக இந்திய விஸ்கி தேர்வு.. குடிமகன்களுக்கான முக்கிய தகவல்..!

2023 ஆம் ஆண்டு உலகின் மிகச்சிறந்த விஸ்கியாக இந்திய தயாரிப்பு விஸ்கி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
2023 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த விஸ்கி தேர்வு செய்யும் பணி சமீபத்தில் நடந்தது. இதில் உலகம் முழுவதும் பல நாடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விஸ்கி வகைகள் கலந்து கொண்டன
 
இந்த விஸ்கி வகைகளை வல்லுநர்கள் சுவை பார்த்து தேர்வு செய்ததில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Indri என்ற விஸ்கி சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
 2023 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த Indri விஸ்கியை சுவைத்து பார்க்க குடிமகன்கள் மிகவும் ஆவலாக இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva