1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (10:34 IST)

Asian Games 2023: இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கம்! – துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி!

Asian Games
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மேலும் ஒரு தங்கத்தை வென்றுள்ளது.



சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டு பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இந்திய வீரர்கள், வீராங்கனைகளும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

இதுவரை இந்தியா 10 தங்கம், 15 வெள்ளி, 14 வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களை வென்று புள்ளிப்படியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் ஆடவர் பிரிவில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் டிராப் போட்டியில் இந்திய ஆடவர் அணி 361 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளது.

Edit by Prasanth.K