1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 1 அக்டோபர் 2023 (08:38 IST)

ஒரே நாளில் 3 முறை பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா.. ஆசிய விளையாட்டு போட்டியில் குவியும் பதக்கஙக்ள்..!

ஆசிய விளையாட்டுப் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் பாகிஸ்தானை இந்தியா மூன்று விதமான போட்டிகளில் தோற்கடித்து பதக்கங்களை குவித்து வருகிறது. 
 
நேற்று நடைபெற்ற  ஸ்குவாஷ் இறுதி போட்டியில் பாகிஸ்தானை இந்தியா 2-1  என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 
 
அதேபோல் நேற்று மாலை நடைபெற்ற SAFF U-19 போட்டியிலும் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வென்று இந்தியா சாம்பியன் பட்டம் பெற்றது. 
 
மேலும் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியிலும் இந்திய அணி 10 - 2 என்ற கோல்கணக்கில் மிக அபாரமாக வெற்றி பெற்றது. நேற்று ஒரே நாளில் மூன்று முறை பாகிஸ்தானை இந்திய அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இந்த நிலையில் இந்திய அணி 10 தங்கம், 14 வெள்ளி மற்றும் 14 வெண்கலம் என மொத்தம் 38 பதக்கங்களுடன் சீனா, ஜப்பான், தென்கொரியாவை அடுத்து நான்காவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva