ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (19:05 IST)

இந்திய ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்படாது- அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தகவல்

indian railway
இந்திய ரயில்வேதுறை தனியார்மயமாக்கப்படாது என மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார்.

சென்னை பெரம்பூரில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில் முதன் முறையாக உள் நாட்டு தொழில் நுட்பத்தில் ரூ.97 கோடி செல்வில் அதி நவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டுள்ளன.இது மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த அதிவேகம் ரயில்களுக்கு வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இன்று வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் மாதிரிகளைப் பார்வையிட்ட ரயில்வேதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ரயில்வேதுறையை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், ரயில்வேதுறையை முன்னேற்றி தரமான ரயில்கள் மூலம் மக்களுக்கு நல்ல பலன் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே தற்போதைய நோக்கமாகவுள்ளது எனத் தெரிவித்தார்