வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (18:13 IST)

அதிக கட்டணம் பெறுவதாக புகார்: ஓலா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

ola uber
அதிக கட்டணம் பெறுவதாக ஓலா மற்றும் ஊபேர் நிறுவனங்கள் மீது புகார் வந்துள்ளதை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
ஓலா,ஊபேர்  ஆகிய இரண்டு நிறுவனங்கள் இந்தியா முழுவதும் போக்குவரத்து சேவை செய்து வருகிறது. ஆனால் இந்த சேவைக்கு பயனாளிகளிடம் இருந்து அதிக கட்டணம் பெற்று வருவதாக நாடெங்கிலும் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தது
 
அதுமட்டுமின்றி சேவைகளில் குறைபாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளிக்க ஓலா,ஊபேர் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நோட்டீசுக்கு 15 நாட்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது