திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 20 மே 2022 (18:09 IST)

வரும் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: பிரசாந்த் கிஷோர்

prasanth
வரும் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என தேர்தல் வியூக மன்னன் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சோனியா காந்தி தலைமையில் சமீபத்தில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் குறித்து தனது டுவிட்டரில் விமர்சனம் செய்த பிரசாந்த் கிஷோர் இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தெரிவித்துள்ளார் 
 
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை தக்க வைத்துக்கொள்ள சிலருக்கு இந்த தேர்தல் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது