வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 மே 2021 (10:54 IST)

இந்தியாவில் கூடிய விரைவில் 8 தடுப்பூசிகள்… என்னென்ன தெரியுமா?

கொரோனா பரவல் இந்தியாவில் உச்சபட்ச அளவில் தாக்கங்களை செலுத்தி வரும் நிலையில் விரைவில் 8 தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்படும் என நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் இவை தவிர ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி மூன்றாவது தடுப்பூசியாக விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.

இந்நிலையில் இப்போது நிதி ஆயோக் உறுப்பினர் வி கே பால் அறிவிப்பின் படி விரைவில் இந்தியாவில் 8 வகையான தடுப்பூசிகள் நடைமுறையில் இருக்கும் எனக் கூறியுள்ளார். அதன் மூலம் இன்னும்  5 மாதத்தில் 216 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருக்கும் என சொல்லப்படுகிறது.

8 வகையான தடுப்பூசிகள்:-
  • கோவிஷீல்ட்,
  • கோவேக்சின்,
  • பயலாஜிக்கல் இ,
  • ஜைடஸ் கெடிலா டிஎன்ஏ,
  • நோவோவேக்ஸ்,
  • மூக்கு வழி செலுத்தும் பி.பி. தடுப்பூசி,
  • ஜெனோவா எம்.ஆர்.என்.ஏ.,
  • ரஷ்யாவின் ஸ்புட்னிக்.