செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 மே 2021 (10:27 IST)

Oxygen Bus - கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யேகமாக !!

கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறலால் பாதிக்காமல் இருக்க ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் இரண்டு வார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டி வருகின்றது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. 
 
இந்நிலையில் ஸ்லீப்பர் பேருந்துகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்பாடு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாகவே இந்த திட்டத்தை திருப்பூரில் உள்ள யங் இந்தியன்ஸ், திருப்பூர் ரைடர்ஸ் கிளப் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். 
 
ஆம், திருப்பூரில் கொரோனா நோயாளிகள் மூச்சுத்திணறலால் பாதிக்காமல் இருக்க ஆக்சிஜன் பேருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இப்பேருந்தில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு 10 லிட்டர் ஆக்சிஜன் செலுத்தும் அளவு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், 24 மணி நேரமும் இதனை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.