1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (15:46 IST)

2027-ல் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும்.! ஐ.எம்.எப் துணை நிர்வாக இயக்குநர் கணிப்பு.!!

Gita Gobinath
2027-ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும், என சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் தெரிவித்தார்.
 
டெல்லியில் தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், கடந்த நிதியாண்டில் நாம் எதிர்பார்த்ததை விட இந்தியாவின் வளர்ச்சி சிறப்பாக அமைந்துள்ளது என்றார். அதன் விளைவாக நடப்பு ஆண்டுக்கான எங்களது கணிப்பு மாற்றம் கண்டுள்ளது என்றும் தனியார் நுகர்வு மீண்டு வருவதும் இதற்கு மற்றொரு காரணமாக பார்க்கிறோம் என்றும் இந்த எண்ணிக்கை கடந்த நிதி ஆண்டில் 4 சதவீதமாக வளர்ச்சி கண்டது என்றும் அவர் தெரிவித்தார்.
 
நாட்டில் ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் குட்ஸ், இருசக்கர வாகன விற்பனையும் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார். மேலும் பருவமழை காரணமாக இந்த முறை அறுவடையும் சிறப்பாக இருக்கும் என்றும் அதன் காரணமாக விவசாயம் சார்ந்த வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில் தான் பொருளாதார வளர்ச்சியை கனித்துள்ளதாகவும், 2024-25 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதம் வரை அதிகரிக்கும்  என எதிர்பார்ப்பதாகவும் கீதா கோபிநாத் குறிப்பிட்டார்.

 
கடந்த ஆண்டு  பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, பொருளாதார ரீதியாக உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தியா மாறியது என்ற ஒரு தெரிவித்தார்.  உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் இந்தியா என ஐந்து நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்றும் 2027ம் ஆண்டுக்குள் இந்தியா 3வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என்றும் கீதா கோபிநாத் குறிப்பிட்டார்.