இந்தியாவில் விரிவுபடுத்தப்படும் ஏஐ பயன்பாடு: கூகுள் அறிவிப்பு..!
இந்தியாவில் கூகுள் பயன்பாட்டை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூகுள் அங்கமான டீப் மைண்ட் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவு இயக்குனர் அபிஷேக் பாப்னா அவர்கள் கூறியுள்ளார்
ஏஐ டெக்னாலஜியின் பயன்பாடு இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிகமாகி வரும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் டெக்னாலஜி புகுந்து விட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்தியாவில் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அபிஷேக் பாப்னா கூறியுள்ளார் அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
இந்தியாவில் ஏஐ தொடர்பான சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம். குறிப்பாக, மொழி, வேளாண் துறை ஆகிய இரண்டு துறைகளில் ஏஐ தொழில்நுட்ப பயன்பாடுகளை அதிகரிக்கும் முயற்சியில் கூகுள் திட்டமிட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சிக்கு மொழி மிக அவசியம் என்பதும், மொழி தடையால், ஒருவர் தன் மருத்துவப் பிரச்சினையை மருத்துவரிடம் விளக்க முடியாமல் போகும் நிலை ஏற்பட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
Edited by Siva