திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (15:25 IST)

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா.?

Chennai Rain
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் பல மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நீலகிரி, கோவை, திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில் இன்றும், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளையும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 115.6 மி.மீ., முதல் 204.4 மி.மீ., வரை மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
திருப்பூர், தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
மேலும் வருகிற 18-ஆம் தேதி கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மைய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.