1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (09:00 IST)

வெறும் அரசாங்க விழாதான், மற்றுமொரு விடுமுறை நாள்தான்.. சுதந்திர தினம் குறித்து வைரமுத்து..!

நாடு முழுவதும் இன்று 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் சென்னையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சுதந்திர தின கொடியை  ஏற்ற உள்ளார் என்பதும் அதேபோல் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தில் பல அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் கவிஞர் வைரமுத்து இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

ஒரு சமயப் பண்டிகையின்
கொண்டாட்டக் கூறுகள்
ஒரு தேசியத் திருவிழாவுக்கு
ஏனில்லை?

நான் அறியாமலே
இந்தக் கொண்டாட்டம்
எனக்காகவும்தான் என்ற
உரிமைப்பாடு
ஏன் உணரப்படுவதில்லை?

தேசத்தைத் தனி மனிதனும்
தனிமனிதனை தேசமும்
சுரண்டுவது ஓயும்வரை
142 கோடிக்கும்
சுதந்திரம்
பொதுவுடைமை ஆவதில்லை

அதுவரை

அது வெறும்
அரசாங்க விழாதான்
மற்றுமொரு
விடுமுறை நாள்தான்

நம்பிக்கையோடு
சொல்லிப் பழகுங்கள்
விடுதலைத் திருநாள்
வாழ்த்துக்கள்


Edited by Siva