1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India Corona cases today

2 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

India
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக மெல்ல அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,569 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,31,25,370 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 19 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,24,260 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,25,84,710 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 16,400 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
எதிர் வரும் 19, 20 ஆம் தேதிகளில் மழை, பலத்த காற்று - வானிலை எச்சரிக்கை!