திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (09:50 IST)

கொடைக்கானலில் தொடங்கும் “கோடை விழா”! – தேதி அறிவிப்பு!

Kodai Vizha
ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாட்டின் மிக முக்கியமான கோடைக்கால சுற்றுலா தளங்களில் கொடைக்கானலும் ஒன்று. தற்போது கோடைக்கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கொடைக்கானல் நோக்கி பயணித்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் கோடைக்காலத்தில் கொடைக்கானலில் கோடை விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை காண சுற்றுலா பயணிகள் பலரும் கொடைக்கானல் செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா மே 24ம் தேதி தொடங்கி ஜூன் 2 வரை 10 நாட்களுக்கு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

கோடை விழாவை கொண்டாடும் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தெரிவித்துள்ளார்.