ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 17 மே 2022 (08:57 IST)

இந்தியாவின் முடிவால் உலகச்சந்தையில் விலையேறிய கோதுமை!

wheat
இந்தியாவின் அதிரடி முடிவால் உலக சந்தையில் கோதுமை விலை உச்சத்திற்கு சென்று உள்ளதால் உலக நாடுகள் இந்தியா மீது தங்களது அதிருப்தியை தெரிவித்து உள்ளது 
 
சமீபத்தில் இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது என்பதும் இதனை அடுத்து உலக சந்தையில் கோதுமை விலை கிடுகிடுவென உயர்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது 
 
குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் கோதுமையுடன் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விலையில் விற்று வருவதாகவும் இது புதிய உச்சம் என்றும் கூறப்படுகிறது 
 
கோதுமை உற்பத்தியில் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றான இந்தியா பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த நிலையில் தற்போது உள்நாட்டிலேயே பற்றாக்குறையை இருப்பதன் காரணமாக கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது