1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (15:14 IST)

ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு : நீதிபதி அதிரடி

ஐ.என். எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் பா. சிதம்பரம் சிபிஐ போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
சிபிஐ வழக்கில் ஏற்கனவே சிதம்பரத்துக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன்கோரிய சிதம்பரம் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மேலும், இதுகுறித்து நீதிபதிகள் கூறியுள்ளதாவது :
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும். போலி நிறுவனம் தொடங்கப்பட்டு அதன் பெயரில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை கூறுகிறது.
 
எனவே, ஐ.என்,எக்ஸ் மீடியா வழக்கில் பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என்று கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் ஜாமின் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்ததை அடுத்து,சிதம்பரம் உச்ச நீதிமன்றம் அணுக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.