1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (17:32 IST)

சிதம்பரத்தை தொடர்ந்து சிவகுமாருக்கும் ஜாமீன்: காங்கிரஸ் பெருமூச்சு!!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான டி.கே.சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 
 
காங்கிரஸ் பிரமுகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ தரப்பினரால் கைது செய்யபட்டிருந்த நிலையில் நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்ப்ட்டது. இருப்பினும் அவர் அமலாக்கத்துறையினரின் விசாரணை வளையத்தில் உள்ளார். 
 
இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் வலிமையான காங்கிரஸ் தலைவராக திகழ்ந்து வரும் டி.கே சிவக்குமார் என்பவரை அமலாக்கத்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்தனர். 
 
டிகே சிவக்குமார் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். ஆனால், தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட போதும் ஒருவர் பின் ஒருவர் கைது செய்யப்பட்டது போலவே தற்போது ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது. சிவகுமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர்.