தீபாவளியை சிறையில் கழிக்கும் ப சிதம்பரம்

Last Modified வியாழன், 24 அக்டோபர் 2019 (21:43 IST)
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ப சிதம்பரம் அவர்களுக்கு, சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இன்னும் அவருக்கு ஜாமீன் கிடைக்காததால் அவரால் விடுதலையாக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் டெல்லி உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம் 7 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு அடுத்த விசாரணையை நவம்பர் 4 ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டது

இதனை அடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரம் அவர்களின் அமலாக்கத்துறையின் காவலை வரும் 30ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. வரும் 27ஆம் தேதி தீபாவளி வரவுள்ள நிலையில் 30ஆம் தேதி வரை அவர் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால் அவர் இந்த ஆண்டு தீபாவளியை சிறையில் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :