வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (19:22 IST)

படித்துக்கொண்டே இருக்கும் கணவர்.. என் மீது அக்கறை இல்லை .. விவாகரத்து கேட்கும் மனைவி !

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த கோச்சிங் செண்டர் ஆசிரியர் ஒருவருக்கும் - நூர்னிஷா என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றதாகத் தெரிகிறது. இந்நிலையில்  கணவர் தன் மீது அக்கறை கொள்ளவில்லை என்று கூறி அப்பெண் நீதிமன்றத்தில் விவாகரத்து வழங்குமாறு கேட்டுள்ளார்.
நூர்னிஷாவின் கணவர் முனைவர் பட்டம் பெற்றவர். தான் படித்ததை மற்றவர்களுக்கும் கற்றுத்தா வேண்டும் என்பது பொருட்டு அங்கு ஒரு போட்டித்தேர்வுக்கான பயிற்சிமையம் நடத்திவருகிறார். இதில் ஏராளமானவர்கள் பயிற்சி எடுத்துவருகின்றனர். 
 
இந்நிலையில் தம் மனைவி நூர்னிஷாவுடனாக உறவை சரிவர பேணவில்லை என தெரிகிறது. வீட்டிற்கு வந்தும் போட்டித்தேர்வுகள் பற்றி குறிப்புகள் எடுப்பது கற்பிப்பது பற்றியே பேசி சிந்தித்துவந்ததாக தெரிகிறது. இதனால் மனம் வெறுத்துபோன நூர்னிஷா, மனைவியாக என்மீது கணவர் எந்த அக்கறையும் கொள்ளவில்லை தேர்வுகள் பற்றியே சிந்தித்துக்கொண்டுள்ளவரிடம் என்னால் வாழ முடியாது அதனால் விவாகரத்து செய்வுள்ளதாக கூறியுள்ளார்.