புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (16:17 IST)

காப்பாத்துங்க ஹரி... பாத்ரூமில் ரத்தம்; மாயமான மனைவி: சிக்கலில் விமல்!

வீட்டில் இருந்த மனைவி காணாமல் போனதால், பதறிப்போன கணவன் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளான். 
 
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியை சேர்ந்தவர் ஹரிஹரன். ஜவுளித்தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்தார். வழக்கம் போல் சம்பவ தினத்தன்று வேலையை முடித்து வீட்டிற்கு திரும்பிய ஹரிக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. 
 
ஆம், வீட்டின் உள்ளே ரத்தக்கறையுடன் ஹாக்கி ஸ்டிக் ஒன்று கிடந்தது. மேலும் தரையில் ஆங்காங்கே ரத்தம் சிந்திக் கிடந்தது. பாத்ரூம் சுவரில் "விமல் ஆளுங்க. காப்பாத்து ஹரி" என ரத்தத்தால் எழுதப்பட்டு இருந்தது. வீடு முழுவதும் மனைவியை தேடியும் அவரை காணவில்லை.
 
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரி போலீஸுக்கு தகவல் கொடுத்தான். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வீட்டிலிருந்த தடயங்கள் சேகரிக்கரித்தனர். மேலும் ஹரியின் மனைவி கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகித்தனர். 
 
அதோடு யார் இந்த விமல் என்ற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். விமல் என்பவர் ஹரியிடம் பணியாற்றும் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது.