புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (09:23 IST)

நண்பன் மீது பாலியல் புகார் சொன்ன மனைவி – கணவன் செய்த கொடூர செயல் !

பெருங்குடி அருகே தான் துணி மாற்றும் போது எட்டிப்பார்த்த கணவனின் நண்பனைப் பற்றி புகார் சொன்ன மனைவியை  கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார் அந்த கொடூர கணவன்.

உதயகுமார் மற்றும் மணிமேகலை எனும் காதல் தம்பதிகளுக்கு 6 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குடும்பம் பெருங்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி எனும் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளது. மகிழ்ச்சியாக சென்ற இந்த குடும்பத்தில் புயலாக வீசியுள்ளது கணவரின் குடிப்பழக்கத்தால் நடந்த ஒரு சம்பவம். உதயகுமார் எப்போதும் தனது வீட்டில் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதற்கு மனைவி மணிமேகலை மறுப்பு சொல்லவே அடிக்கடி அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. இந்நிலையில் நேற்றும் வழக்கம்போல உதயக்குமார் தனது நண்பர்களோடு வீட்டிலேயே குடித்துள்ளார். அனைவரும் போதையில் மிதக்க வந்திருந்த நண்பர்களில் ஒருவரான மாணிக்கவேல் என்பவர் பக்கத்து அறைக்கு சென்று மணிமேகலை துணி மாற்றுவதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. இதனை மணிமேகலை பார்த்துவிட்டார்.

இதுசம்மந்தமாக தனது கணவனிடம் மணிமேகலைப் புகார் சொல்லியுள்ளார். ஆனால் அவர் தன் மனைவியைப் பேச்சை நம்பாமல் நண்பருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மணிமேகலை போலிஸ் ஸ்டேஷன் சென்று மாணிக்கவேல் மற்றும் கணவர் மீது புகார் அளித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் உதயக்குமார் அவரைக் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் நிலைகுலைந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தும் பலனிள்ளாமல் உயிரிழந்துள்ளார். இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்து போலிஸார் உதயக்குமாரைக் கைது செய்துள்ளனர்.