புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 31 ஆகஸ்ட் 2019 (11:47 IST)

மனைவிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர் – வித்தியாசமாக தண்டனை கொடுத்த கணவன் !

தெலங்கானா மாநிலத்தில் தனது மனைவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞனை மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் வசித்து வந்த திருமணம் ஆனப் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லைக் கொடுத்துள்ளார். அவரைப் பெரிதாக அந்தப் பெண் கண்டுகொள்ளாதபோதும் அவரது தொல்லைகள் நின்றபாடில்லை.

இதை அந்தப் பெண் தன் கணவரிடம் சொல்லியுள்ளார். இதைக் கேட்டு கோபமான அவர் தன் மனைவி தனியாக சென்று கொண்டிருக்கும் போது, அந்த இளைஞன் அந்த பெண்ணிடம் அத்திமீறியுள்ளார். இதைப் பார்த்த அவர் அந்த இளைஞனை பிடித்து அடி வெளுத்து வாங்கியுள்ளார். பின்னர் மரத்தில் கட்டிவைத்து அடித்த அவர் தன் மனைவியிடம் ஷூவைக் கழட்டி கொடுத்து அடிக்க சொல்லி அதை வீடியோ எடுத்து சமூகவலைதளஙகளில் வெளியிட்டுள்ளார்.