கனடா பிரதமரை முத்தமிட்ட டிரம்ப் மனைவி: கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்

Last Modified செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (20:53 IST)
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி முத்தமிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருவதை அடுத்து டிரம்ப்பை நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டின் முடிவில் அனைத்து தலைவர்களும் தங்கள் குடும்பத்துடன் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு வந்தது. அப்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தனது அருகில் அழைத்த டிரம்ப் மனைவி மெலானியா திடீரென அவரது கன்னத்தில் முத்தமிட்டார். இதை அங்கிருந்த ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இந்த புகைப்படம் தற்போது உலகம் முழுவதும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை வைத்து மெலானியா, கனடா பிரதமரை காதலிப்பதாகவும், விரைவில் அவர் கனடா சென்றுவிடுவார் என்றும் நெட்டிசன்கள் தங்கள் இஷ்டத்திற்கு கற்பனை குதிரையை அவிழ்த்துவிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் இருக்கும் டிரம்ப்பின் ரியாக்சன் தான் நெட்டிசன்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் காரணமாக இருக்கின்றது


இதில் மேலும் படிக்கவும் :