புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2019 (15:33 IST)

கணவர் எடுத்த அலங்கோலமான புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.


 
பின்னர் 8 வருட  காதலுக்குப் பின்னர் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்த்து வரும் இவர்கள் திருமணத்திற்கு பிறகும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி அடுத்தடுத்து புது படங்ககளில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இருவரது நடிப்பில் வெளிவந்த மஜிலி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  
 
இதற்கிடையில் படத்தின் ஷூட்டிங் முடிந்து கொஞ்சம் விடுமுறை கிடைத்தால் இருவரும் அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்தவகையில் தற்போது ஸ்பெயின் நாட்டிலுள்ள இபிசா கால்மா ( Ibiza Calma ) என்ற இடத்திற்கு சென்றுள்ளனர்.    
 
அங்கு அவரது கணவர் நாக சைதன்யா எடுத்த தனது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கவர்ச்சியான இந்த புகைப்படம் பார்ப்பதற்கு முகம் சுளிக்காமல் அழகாக இருக்கிறது என சமந்தாவின் ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Pc @chayakkineni