செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2022 (16:02 IST)

டிவி, ஃப்ரிட்ஜ் கேட்ட மனைவி அடித்துக் கொலை! சூட்கேஸில் வைத்து வீசிய கணவன்!

ஹரியானாவில் டிவி, ஃப்ரிட்ஜ் கேட்டு தொல்லை செய்த மனைவியை கணவன் கொன்று சூட்கேஸில் வைத்து வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியான மாநிலத்தின் குருகிராம் பகுதியை சேர்ந்தவர் 22 வயதான ராகுல். இவர் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவரும் சில ஆண்டுகள் முன்னதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

ராகுல் குருகிராமில் தனியார் நிறுவனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அவரது சம்பளம் தினசரி செலவுகளுக்கே சரியாக இருந்த நிலையில் பிரியங்கா தனக்கு டிவி, வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்கள் வேண்டும் என அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார்.


சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் வலுவடைந்த நிலையில் ஆத்திரமடைந்த ராகுல், பிரியங்காவை அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் இரவு முழுக்க தனது மனைவியின் பிணத்தோடு இருந்த அவர் என்ன செய்வதென்று யோசித்து காலையில் இரு சூட்கேசை வாங்கி வந்து அதில் மனைவியின் உடலை நிர்வாணமாக கிடத்தி மூடி ஒரு ஆட்டோவில் எடுத்து சென் ஆள் நடமாட்டமில்லாத சவுக் பகுதியில் வீசியுள்ளார்.

ஆளரவமற்ற பகுதியில் சூட்கேசில் கிடந்த பிணம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சிசிடிவி காட்சிகளை வைத்து ராகுலை பிடித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited By: Prasanth.K