புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 19 அக்டோபர் 2022 (19:56 IST)

13 வது மாடியில் இருந்து கீழே விழுந்த பேராசிரியை !

திருச்சி மாவட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியை 13 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் வடமலைப்புதூர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிலன் 13வது மாடியில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் மனைவி செளமியா(32). இவர் தில்லை நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் வணிகவியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில்  நேற்று முன் தினம் இரவில் செளமியா 13 வது மாடியில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சக குடியிருப்பாளர்கள் இதுகுறித்து போலீஸுக்கு தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்,ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த செளமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

 இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj