1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 12 அக்டோபர் 2022 (12:09 IST)

யோ-யோ ஆப்பில் சிக்கிய இளம் பெண்கள்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!

அழகான ஆண்கள் படத்தை வைத்து பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வாங்கி மிரட்டிய அழகுராஜாவை பிடித்தது கோவை போலீஸ்.


அழகிய ஆண்கள் படங்களை ப்ரொபைல் போட்டோவாக வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று மிரட்டு பணம் பறித்த நபரை கோவை சைபர் கிரைம் போலீசார் பிடித்துள்ளனர்.

யோ-யோ என்ற ஆப் மூலமாக தன்னிடம் பழகி, அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பெற்று பணம் பறித்ததாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் விருதுநகரை அடுத்த கூமப்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் போலியாக ப்ரொபைலை உருவாக்கி பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரமசிவம் யோ யோ என்ற (YoYo) ஆன்லைன் இணையதள ஆப் மூலம் பல பெண்களிடம் நண்பராக பழகி அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக (ப்ரொபைல் போட்டோவாக ) வைத்து பல பெண்களை நம்ப வைத்து அவர்களுடைய அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்றதும்.

இதனை நம்பி தனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை கொடுத்த பெண்களிடம், அவற்றை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டி அவர்களிடமிருந்து பணத்தை பெற்று ஜாலியாக இருந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக ஊடகங்களிலும், முன் பின் தெரியாத நபரிடமும் பழக்கமாகி, அவர்களது ஆசை வார்த்தைகளை நம்பி இது போன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.